Pertukaran MoU antara Unisel dan Selgate. Foto Facebook Unisel
RENCANA PILIHANSELANGOR

யுனிசெல் மற்றும் செல்கேட் சுகாதாரத்துறையில் இணைந்து செயல்பட இணக்கம் !!!

ஷா ஆலம், ஜூன் 26:

சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) மற்றும் செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத  சேவை சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளது என்று யுனிசெல்லின் தொழில்முறை தொடர்பு பிரிவின் இயக்குநர் ஹாஸ்ரில் அபு ஹாசான் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் வழி ஷா ஆலம் மற்றும் பெஸ்தாரி ஜெயா பல்கலைக் கழக வளாகத்தில் செல்கேர் கிளினிக்கள் திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

” இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நோய் கண்டறியும் ஆய்வகம் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை மையம் ஆகியவை யுனிசெல் மற்றும் செல்கேட் இணைந்து ஷா ஆலம் வளாகத்தில் திறக்கப்படும். இந்த மையத்தின் வழி யுனிசெல் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சேவை ஆற்றி வர முடியும். இது மட்டுமின்றி, சுகாதார அறிவியல் கல்வி தொடர்பில் இரு தரப்பினரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வழி வகுக்கும்,” என்று முகநூலில் அவர் பதிவு செய்துள்ளார்.


Pengarang :