SELANGOR

டெங்கு காய்ச்சல் சிலாங்கூரில் குறைந்தாலும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !!!

ஷா ஆலம், ஜூலை 6:

சிலாங்கூர் மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் சம்பவங்கள் 16.8% குறைந்துள்ளது அல்லது 31,007 ஆக உள்ளது என்று சிலாங்கூர் மாநில சுகாதார இலாகாவின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி நாடிமான் தெரிவித்தார்.

” கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் 6,265 குறைவாக உள்ளது. பெட்டாலிங் மாவட்டம் 10,944 சம்பவங்கள் பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து  கிள்ளான் மாவட்டம் (5,829), உலு லங்காட் (5,625), கோம்பாக் (4,457) மற்றும் செப்பாங் (1,720) முறையே பதிவு செய்துள்ளது. டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 34 ஆக இருந்தது. இந்த ஆண்டு மூன்று சம்பவங்கள் குறைந்துள்ளது,” என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Pengarang :