KUCHING, 28 Julai — Reaksi Ketua Umum Pakatan Harapan (PH) Datuk Seri Anwar Ibrahim ketika menyampaikan ucapan pada Majlis Makan Malam ‘Harapan Sarawak Baru’ malam ini.?– fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA?
NATIONAL

பாக்காத்தான் தலைவர்கள் மன்றம் அன்வாரை பிரதமர் வேட்பாளராக நிலைநிறுத்தியது !!!

ஷா ஆலம், ஜூலை 6:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெயரை அதன் தலைவர்கள் மன்றம் நிலைநிறுத்தியது.இன்று நடைபெற்ற பாக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ ஷாபி அப்டால் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்டதை பற்றியும் விவாதிக்கப் பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதிக் கட்சியின் தலைவருமான அன்வார், மக்களின் ஆணையை மீட்டெடுக்க ஷாபி அப்டாலுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

” மக்களின் ஆணையை மீட்டெடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவைப்படுகிறது என்று தலைவர்கள் மன்றம் நம்பிக்கை தெரிவித்தனர,” என அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிக்கையில் அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கூட்டாக கையொப்பம் இட்டுள்ளனர்.


Pengarang :