Dato’ Seri Amirudin Shari memberi ucapan ringkas sebelum menunaikan solat Jumaat di Masjid At-Taqwa Bukit Kapar, Klang pada 17 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

செலாங்காவை மொத்தம் 6.15 மில்லியன் பேர் பயன்படுத்துவர் – மந்திரி பெசார் தகவல்

ஷா ஆலம்,ஜூலை 17:

சிலாங்கூர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செலாங்கா (பாதுகாப்பான நுழைவு படி) பயன்பாட்டை மொத்தம் 6.15 மில்லியன் சிலாங்கூர்வாசிகள் பயன்படுத்துவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ அமிரூடின் ஷஹாரி குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை 6.5 ,மில்லியன் மக்களைக் கொண்ட மாநிலத்தின் மொத்த மக்களுடன் நெருக்கமாக இருப்பதை இது சாத்தியப்படுத்தியுள்ளதாக மேலும் கூறிய அவர் இது இம்மாநிலத்தின் 95 விழுக்காடு மக்கள் அதனை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.மேலும்,சிலாங்கூர் மாநிலத்திற்கு அடுத்து கோலாலம்பூர் வாழ் மக்கள் இதனை அதிகம் பயன்படுத்துவதாகவும் நினைவுக்கூர்ந்தார்.

அதேவேளையில்,இந்த செலாங்காவை சுமார் 77,470 வளாகங்களில் பயன்படுத்துவதாகவும் அவர்கள் 332 குறுகிய செய்தி சேவையின் (எஸ்.எம்.எஸ்) மூலம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.சிலாங்கூர் சட்டமன்ற அமர்வின் போது விளக்கம் அளித்தார்.
SELangkah பயன்பாட்டைப் பயன்படுத்தும் தனிநபர்களின் தனிப்பட்ட தரவு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த மந்திரி பெசார் இந்தக் தகவல்கள் மாநில அரசின் காப்புரிமையாக மாறும் என்றார்.அதன் மூலம் கோவிட்-19 தொற்றுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய அஃது உதவும் என்றார்.அந்த நோக்கத்திற்காக மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கூறினார்.

இந்த செலாங்கா நடவடிக்கை வைரஸ் தொற்றை கண்டறியும் நோக்கில் கடந்த மே 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. வளாகத்தின் உரிமையாளர்கள் QR குறியீட்டை selangkah.mbiselangor.com.my அல்லது selangkah.my ஆகிய பக்கங்களின் மூலம் பதிவு செய்து காண்பித்தல் வேண்டும்.


Pengarang :