Peniaga nasi lemak, E Segar menerima lesen sementara dari EXCO Kerajaan Tempatan, Ng Sze Han hari ini di
ECONOMYSELANGOR

சுபாங் ஜெயாவில் 503 பேருக்கு தற்காலிக வர்த்தக லைசன்ஸ்

பூச்சோங், செப் 11-  சுபாங் ஜெயா வட்டாரத்தை சேர்ந்த 503 பேருக்கு தற்காலிக 
வர்த்தக லைசன்ஸ் வழங்கப்பட்டது.  சிறு வியாபாரிகளான இவர்கள் இதுநாள் 
வரை லைசன்ஸ் இன்றி வர்த்தகத்தை நடத்தி வந்தனர்.

கடந்த ஜூன் மாதம் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்த போது  சிறு வியாபாரிகளுக்கு தற்காலிக லைசன்ஸ் வழங்கும் திட்டம் அமல்  படுத்தப்பட்டதாக சுபாங் ஜெயா நகராண்மைக் கழக லைசன்ஸ் பிரிவு இயக்குநர் 
முகமது அஸ்லி மிஸ்வான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக வருமானத்தை இழந்த வணிகர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

222 வியாபாரிகள்  காலை, மாலை, இரவு வேளைகளில வியாபாரம் செய்வதற்கு   
ஏதுவாக 12 புதிய வியாபார இடங்களை தாங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வியாபார அனுமதிக்கு விண்ணப்பம் செய்தோருக்கு குறிப்பாக பி 40 பிரிவினருக்கு 
உதவும் வகையில் லைசன்ஸ் விண்ணப்பம் விரைந்து பரிசீலனை செய்ய பட்டதாக 
அவர் மேலும் சொன்னார்.

தாமான் கின்ராராவில்  நடைபெற்ற  வர்த்தகர்களுக்கு தற்காலிக லைசன்ஸ் வழங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் நோராய்னி ரோஸ்லான் ஆகியோரும் 
கலந்து கொண்டனர்.

Pengarang :