ECONOMYSELANGOR

4 ஆண்டுகளில் வெ.20 கோடி வருமானம் ஈட்டியது சிடெக்

ஷா ஆலம், அக் 8- சிடெக் எனப்படும் தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னியல் வர்த்தக மன்றம் கடந்த நான்கு ஆண்டுகளில் 20 கோடி வெள்ளி நிகர வருமானத்தைப் பெற்றது.

ஸ்மார்ட் சிலாங்கூர் சிட்டி கான்வேன்ஷன் கண்காட்சி மூலம் அதிக வருமானம் அதாவது 7 கோடியே 70 லட்சம் வெள்ளி பெறப்பட்டதாக சிடெக் தலைமைச் செயல்முறை அதிகாரி யோங் காய் பெங் கூறினார்.

இந்த வருடாந்திர கண்காட்சியில் 100 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் பங்கு கொண்டதாக அவர் சொன்னார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சிறந்த மின்னியல் வர்த்தக விருதளிப்பு நிகழ்வின் வழி 5 கோடியே 60 லட்சம் வெள்ளி இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும் கடந்தாண்டில் மட்டும் இதன் வழி கிடைத்த வருமானம் 2 கோடி வெள்ளி என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.

இதுதவிர இயங்கலை வாயிலான திட்டங்களின் மூலம் ஒன்றரை கோடி வெள்ளி கடந்தாண்டில் பெறப்பட்டது. சிடெக் தொடக்கப்பட்டது முதல் இதுவரை 575 தொழில்முனைவோருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது என்று மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :