காஜாங்-பந்திங்கில் கடுமையாக்கப்பட்ட பொது முடக்கம்- சிலாங்கூர் அரசு கண்காணிக்கும்

ஷா ஆலம், அக் 29- பந்திங், சுங்கை இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் காஜாங், பிளாசா ஹெந்தியான் காஜாங் வளாகம் ஆகிய பகுதிகளில் இன்று தொடங்கி அமல் செய்யப்பட்ட கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை சிலாங்கூர் அரசு அணுக்கமாக கண்காணித்து வரும்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 14 நாட்களுக்கு அமல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி,  இதன் தொடர்பில் தேசிய பாதுகாப்பு  மன்றத்திடம் உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்றார்.

கோவிட் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தால் கோல லங்காட் மாவட்டம் சிவப்பு மண்டலமாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.  இங்கு எண்பதுக்கும் மேற்பட்ட நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள என்று  அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பந்திங், சுங்கை இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் காஜாங், பிளாசா ஹெந்தியான் காஜாங் ஆகிய பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று வெளியிட்டார்.

அந்த கட்டுப்பாட்டு ஆணை இன்று தொடங்கி வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :