ECONOMYSELANGOR

இலக்கவியல் திட்டங்களின் அமலாக்கத்திற்கு வெ.36.9 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 30- சிலாங்கூர் மாநிலத்தை தலைசிறந்த விவேக மாநிலமாகவும் இலக்கவியல் மையமாகவும் உருவாக்கும் திட்டத்திற்காக வரும் 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 36 கோடியே 90 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேவை, சமூகம், வர்த்தகம், ஆக்கத்திறன் ஆகிய துறைகளில் உருமாற்றத்தை ஏற்படுத்துதன் வாயிலாக மாநில பொருளாதாரத்தை உந்தச் செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இலக்கவியல் மயம் வேலை வாய்ப்புகளை பறிக்கும் என்ற மாயை உடைத்து அதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டும் இலக்கவியலுக்கு முக்கியத்தும் அளிக்கப்படுகிறது என்றார் அவர்.

வருமானத்திற்கான புதிய வளங்களைக் உருவாக்குவதும் இலக்கவியல் மய அமலாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 


Pengarang :