SELANGOR

மந்திரி புசார் தனிமைப்படுத்தும் உத்தரவை மந்திரி புசார் மீறவில்லை

ஷா ஆலம், நவ 2- வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் உத்தரவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு போதும் மீறவில்லை. மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட கோவிட்- 19 சோதனைகளிலும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தும் உத்தரவிலிருந்து அவரை விடுவிக்கும் கடிதத்தை சுகாதார அமைச்சு வழங்கியிருந்தது.

ஆகவே, நீர் மாசுபாடு பிரச்னையைக் கவனிப்பதற்காக சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு மந்திரி புசார் சென்றதை சர்ச்சைக்குரிய விவகாரமாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டத் தரப்பினரை அவரின் தனிச் செயலாளர் சைபுடின் ஷாபி முகமது கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற விவகாரங்கள் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியுள்ள இவ்வேளையில் போலீசாரின் பணிகளுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

நாட்டின் சட்டத் திட்டங்கள் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக இவ்விவகாரதில் அமிருடின் முழு ஒத்துழைப்பை போலீசாருக்கு வழங்குவார் என மந்திரி புசார் அலுவலகம் உத்தரவாதம் அளித்துள்ளது. என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 கட்டாய தனிமைப்படுத்தும் விதியை மீறியதாக கூறப்படுவது தொடர்பில் மந்திரி புசாருக்கு எதிராக போலீசார் விசாரணையை தொடக்கியுள்ளதாக கடந்த மாதம் 22ஆம் தேதி செய்தி வெளியானது.

நெகிரி செம்பிலான், பாத்தாங் பெனார் ஆற்றில் ஏற்பட்ட நீர் மாசுபாடு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட  சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு மந்திரி புசார் அமிருடின் ஷாரியும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் டத்தோ துவான் இப்ராஹிமும் கடந்த மாதம் 4ஆம் தேதி வருகை மேற்கொண்டு நிலவரத்தை நேரில் கண்டறிந்தனர்.

 

 

 


Pengarang :