ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

லுவாஸ் சட்டத் திருத்தம் ஒரு மாதத்தில் அமலுக்கு வரும்- மந்திரி புசார் தகவல்

 ஷா ஆலம், நவ 25- நீர் தூய்மைக்கேட்டுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் 1999 ஆம் ஆண்டு சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத் திருத்தம் இன்னும் ஒரு மாதத்தில் அமலுக்கு வரும்.

இந்த சட்டத் திருத்த மசோதா இம்மாதம் 9 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த சட்டத் திருத்தத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு முன்னர் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஒப்புதலை பெறுவது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.

சுல்தான் அவர்கள் கையெழுத்திட்டப் பின்னர் ஒரு மாத காலத்தில் இந்த திருத்த மசோதா சட்டமாக முழுமை பெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இச்சட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஆறுகளை மாசுபடுத்துவோர் கடுமையான தண்டனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆறுகளை மாசுபடுத்துவோருக்கு சிறைத் தண்டனையும் இரண்டு லட்சம் வெள்ளி முதல் பத்து லட்சம் வெள்ளி வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.


Pengarang :