சிலாங்கூரில் 337 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- உலு லங்காட்டில் அதிகமானோர் பாதிப்பு

ஷா ஆலம், டிச 7- சிலாங்கூர் மாநிலத்தில் இன்று 337 கோவிட்-19 சம்பவங்கள் 
பதிவாகின. உலு லங்காட் மாவட்டத்தில் மட்டும் 183 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஜாங் பகுதியில் 169 பேருக்கு இந்நோய் கொண்டுள்ளதாக சிலாங்கூர் சுகாதார 
இலாகா கூறியது. ஜாலான் ஹராப்பான் சிறைச்சாலை தொற்று மையத்துடன் 
தொடர்பில் இருந்தவர்களே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என 
நம்பப்படுகிறது.

கிள்ளான் வட்டாரத்தில் 74 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 
பா மஙகீஸ், தெராத்தாய், அண்டாலாஸ், கெலாடி, உஷா, பெரிகி ஆகிய தொற்று மையங்கள் இந்த நோய்ப் பரவலுக்கு காரணமாக அமைந்தன.

பெட்டாலிங் மாவட்டத்தில் 51 சம்பவங்களும் கோல லங்காட் மற்றும் உலு லங்காட் 
மாவட்டங்களில் தலா 8 சம்பவங்களும் சிப்பாங்கில் 7 சம்பவங்களும் கோம்பாக்கில் 5 
சம்பவங்களும் கோல சிலாங்கூரில் ஒரு சம்பவமும் பதிவானதாக அந்த இலாகா 
முகநூல் வழி வெளியிட்ட அறிக்கையில் கூறியது.


Pengarang :