SELANGOR

குழாய்கள் உடைவது தொடர்பில்  2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறைவான புகார்கள்

ஷா ஆலம், டிச 9- குழாய்கள் உடைவது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டிற்கு பின்னர் பெருமளவு குறைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பழைய குழாய்களை மாற்றும் பணிகளே புகார்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று அவர் சொன்னார்

கடந்த 2016 ஆம் ஆண்டில் 5,000 ஆக இருந்த அத்தகைய புகார்களின் எண்ணிக்கை
 கடந்த 2019 ஆம் ஆண்டில் 2,000 ஆக குறைந்துள்ளதாக அவர் சொன்னார். 

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீர் சேகரிப்பு குளங்கள் மற்றும் குழாய்களை பழுது பார்க்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக கடந்த 2016 ஆகஸ்டு மாதம் முதல் 
இவ்வாண்டு வரை 180 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின் வாயிலாக பயனற்று போகும் நீரின் அளவையும் குறைக்க முடிந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு 31.6 விழுக்காடாக இருந்த பயனற்று போகும் நீரின் அளவு தற்போது 29.6 விழுக்காடாக குறைந்துள்ளது என்றார் அவர்.

Pengarang :