NATIONALSELANGOR

440,771 ரிங்கிட்  மதிப்புள்ள  தங்க வர்த்தக முதலீட்டு மோசடி வழக்கில் விசாரணை

கோலாலம்பூர், டிச  12: சுமார்  440,771 ரிங்கிட்  மதிப்புள்ள  தங்க வர்த்தக முதலீட்டு மோசடி வழக்கில் மூன்று விசாரணை ஆவணங்களைப் போலீசார் திறந்துள்ளனர்.

புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஜைனுதீன் யாகோப் இது பற்றி கூறுகையில், 30 முதல் 70 சதவீதம் வரை லாபம் ஈட்டும் என  உறுதியளித்த இந்த முதலீடு திட்டத்தில்  சிலர் ஏமாற்றப் பட்டுள்ளதாக  புகார்  கிடைத்ததின்  பேரில் கடந்த மார்ச் மாதம் 32 வயது பெண்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார் .

கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை மொத்தம் 15 போலீஸ் புகார்கள் பெறப் பட்டுள்ளதாகவும் இதுபற்றி வ7 ன் கீழ் குற்றம் சாட்டப் பட்டுள்ளது, மேலும் இரண்டு வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் கூறினார்.

முதலீட்டு முடிவை எடுப்பதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமாகச் சில ஆதாரங்களைப் பெற பேங் நெகாரா மலேசியா எச்சரிக்கைப் பட்டியல், பத்திர ஆணையம் மற்றும் உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர்  விவகார அமைச்சகம் போன்றவற்றிலிருந்து பொது மக்கள் கூடுதல் தகவல்களைப் பெறவும்  அறிவுறுத்தப் படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

குற்ற விகிதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்குக் காவல்துறை எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது, குறிப்பாக மோசடி வழக்குகளில் சமூகத்தின் ஈடுபாடும் ஒத்துழைப்பும் மிக அவசியம். இதுப் போன்ற குற்றங்கள் தொடர்ந்து பரவா விடாமல் தடுத்து, ஒழிக்க  பொது மக்களின்  ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.

 

 

 

 

 

 

 

 


Pengarang :