Bank Negara Malaysia
ECONOMYNATIONAL

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ களுக்கு)  பேங்  நெகாரா மலேசியா ரிங்கிட் 5 மில்லியன் வரை நிதியுதவி 

கோலாலம்பூர், டிச16: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எஸ்.எம்.இ களுக்கு)  பேங்  நெகாரா மலேசியா (பி.என்.எம்) உயர் தொழில்நுட்ப வசதிகள் – தேசிய முதலீட்டு அபிலாஷைகள் (எச்.டி.எஃப்-என்.ஐ.ஏ) நிதியிலிருந்து  ரிங்கிட் 1  மில்லியன்  முதல்  ரிங்கிட்  5 மில்லியன் வரை நிதியுதவி  பெற விண்ணப்பிக்கலாம் என்கிறது.

எஸ்.எம்.இ க்கள் மூலதன நோக்கங்களுக்காக  ரிங்கிட் 1 மில்லியன் வரை நிதியுதவி பெறலாம்; மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிக்க ரிங்கிட் 5 மில்லியன் வரை; அல்லது 7 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு மூலதனம் மற்றும் மூலதனம் தொடர்பான செலவினங்களுக்கு  இதனை விண்ணப்பிக்கலாம்.

பாதுகாப்பற்ற கடன்களுக்காக ஆண்டுக்கு 3.5 சதவீதம் வரை அல்லது உத்தரவாதக் கட்டணம் உட்பட 5 சதவீதம் வரை (கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம் மலேசியா பி.டி (சி.ஜி.சி) உத்தரவாதப் பாதுகாப்புடன் இந்த வசதி வழங்கப்படுகிறது, எனப்  பேங் நெகாரா நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வசதி 2020 டிசம்பர் 15 முதல் 2021 டிசம்பர் 31 வரை கிடைக்கும், அல்லது  ஒதுக்கீடு  முழுமையாகப் பயன்படுத்தப்படும் வரை  அமலில்  இருக்கும்.

2021 வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட (HTF) எனப்படும் உயர் தொழில்நுட்பம் , தேசிய முதலீடு ஊக்குவிப்பு-NIA கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்ட  எஸ்.எம்.இ களுக்கு கூடுதல் உதவிகளை வழங்கும் முயற்சியாகும்.

“இந்த வசதி உள்ளூர் நிறுவனங்கள்  அதன் படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ளவும் ,  நெருக்கடியான காலகட்டத்தில் முடங்கி விடாமல்  தடுக்க  வழங்கப்படும் ஊக்குவிப்பாகும். . உலகளாவிய நிலையில் நமது  நிறுவனங்களின்  போட்டி  ஆற்றலை  வலுப்படுத்தவும், விநியோகச் சங்கிலி, சுற்றுச்சூழலுக்கு ஒப்ப செயல்படவும்,  உயர் திறமையான வேலைகளைப் பாதுகாக்கவும் இது  அவசியம் என்கிறது ”

தகுதிவாய்ந்த எஸ்.எம்.இ களில் உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பச் சேவைத் துறைகளில் உள்ளவைகள் ஆகும்.  அவை தேசிய நீண்டகால மூலோபாய வளர்ச்சியில் அடைய வேண்டிய குறிக்கோள்களுக்கு ஏற்ப  (தேசிய முதலீடு ஊக்குவிப்பில்) குறிப்பிடப் பட்டுள்ளன.

மின் மற்றும் மின்னணுவியல் , விண்வெளி, மருந்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐ.சி.டி) தொழில்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அடிப்படையிலான நிறுவனங்கள் ஆகியவை எடுத்துக் காட்டுகளில் அடங்கும்.

தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்ள மற்றும் முக்கிய அரசாங்கத் திட்டங்களில்  ஈடுபட்டுள்ள எஸ்.எம்.இ திட்டப் பங்கேற்பாளர்களுக்குத் தேசியக் கட்டமைப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேற்படி எஸ்எம்இ க்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அவற்றில் வணிக வங்கிகள், இஸ்லாமிய வங்கிகள் மற்றும் பேங்  நெகாரா மலேசியாவால் கட்டுப்படுத்தப்படும் மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் தங்கள் வலைத்தளத்தின் மூலம் அல்லது அவற்றின் கிளைகளுக்கு விஜயம் செய்வதின் வழியும்  விளக்கங்களைப் பெறலாம்..


Pengarang :