ALAM SEKITAR & CUACASELANGOR

சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 38.5 விழுக்காடு குறைந்தது

ஷா ஆலம், ஜன 4- சிலாங்கூரில்  டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 38.5 விழுக்காடு குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் 72,543 ஆக இருந்த டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்தாண்டில் 44,635ஆக குறைந்ததாக அவர் சொன்னார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக 15,518 சம்பவங்கள் பதிவான வேளையில் உலு லங்காட்டில் 9,842 சம்பவங்களும் கிள்ளானில் 6,960 சம்பவங்களும் கோம்பாக்கில் 6,642 சம்பவங்களும் பதிவாகின என்று அவர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நிலையில் சிப்பாங் (2,400), உலு சிலாங்கூர் (1,356), கோல சிலாங்கூர் (925), கோல லங்காட் (865), சபாக் பெர்ணம் (127) உள்ளன என்றார் அவர்.

டிங்கியினால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டில் 56ஆக பதிவு செய்யப்பட்ட வேளையில் கடந்தாண்டில் அந்த எண்ணிக்கை 37ஆக குறைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுப் புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டிங்கி பரவலைத தடுக்க உதவும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :