KLANG, 9 Okt — Orang ramai beratur di hadapan pintu pagar Ibu Pejabat Balai Polis Daerah Klang Selatan bagi mendapatkan maklumat terperinci berkaitan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) di mukim Klang yang berkuatkuasa pada 12 tengah malam tadi. Majlis Keselamatan Negara di bawah Kerajaan Persekutuan mengumumkan pelaksanaan PKPB selama 14 hari bermula hari ini di Mukim Klang susulan peningkatan kes COVID-19 di kawasan tersebut. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
ECONOMYNATIONAL

டிசம்பர் முதல் சுமார் 5,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர், ஜனவரி 31: டிசம்பர் 1 முதல் நேற்று வரை மொத்தம் 251,101 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19  நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்களில் 4,735 பேரிடம்  நோய்த்தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அரசாங்கம் 10,500 முதலாளிகளைக்  கட்டாயப் படுத்தியதால், தங்களின் வெளிநாட்டு தொழிலாளர்களை நோய்த்தொற்று சோதனைக்கு அவர்கள் அனுப்பியதாக அவர் கூறினார்.

“நேற்று, மனிதவள அமைச்சகம் மொத்தம் 8,601 வெளிநாட்டு தொழிலாளர்கள் கோவிட் -19 பரிசோதனைக்கு  உட்படுத்தப் பட்டதாகவும் ,  அவர்களில் 133 பேர்கள் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது”.

“இன்றுவரை, இந்த நோய் பரிசோதனைத் திட்டத்தில் 887 கிளினிக்களும்  ஈடுபட்டுள்ளன,” என்று அவர் இன்று  நடமாட்டக் கட்டுப்பாடு  ஆணையின் (பி.கே.பி)  பயன் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனைக்கு அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும், குறிப்பாக ஆறு மாநிலங்களில், அதாவது சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சபா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகியவற்றில்  உள்ள   நிறுவனங்கள் அவர்களின் தொழிலாளர்களைக் கட்டாயக் கோவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இது தவிர, ஏப்ரல் 20 முதல், மலேசியக் கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் (சிஐடிபி) அமலாக்க உறுப்பினர்கள் நாடு முழுவதும் 8,404 கட்டுமானத் தளங்களை உள்ளடக்கிய 14,840 சோதனைகளை மேற்கொண்டதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

இதை தவிர, நடமாட்டக் கட்டு பாடு  விதிமுறைகளுக்கு  (எஸ்ஓபி) இணங்க, 426 நபர்கள் மீது குற்றப்பதிவைப் போலீசார் மேற்கொண்டதாகவும்    அவர்களில்  21 ( ரிமாண்ட் ) தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார். அதனுடன் நாட்டின்  எல்லை சாவடிகளில்  23 சட்டவிரோதக் குடியேறிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர், ஐந்து நில வாகனங்கள் மற்றும் இரண்டு படகுகள்  கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் கூறினார்..

 

 


Pengarang :