PBTSELANGORYB ACTIVITIES

இவ்வாண்டில் 25,000 வணிகர்களை இலக்கவியலுக்கு மாற்ற அரசு இலக்கு

ஷா ஆலம், பிப் 4- இவ்வாண்டு இறுதிக்குள் 25,000 வணிகர்களை இலக்கவியலுக்கு மாற்ற சிலாங்கூர் மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிறு மற்றும் அங்காடி வியாபாரிகள்,  சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் ஆகியோர் இத்திட்டத்தில் இலக்காக கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இணைய வாயிலான வர்த்தக கோட்பாடு குறித்து பலர் இன்னும் அறிந்திராத காரணத்தால் இந்த இலக்கை அடைவதற்கு கடுமையாக பாடுபட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று லெம்பா சுபாங் 1, பி்.பி.ஆர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில தகவல் தொழில் நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டு நடத்தப்படும் மின்-வர்த்தக வகுப்புகளில் 1,200 தொழில் முனைவோர் பங்கேற்பர் எனத் தாங்கள் எதிர் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :