NATIONALPENDIDIKANSELANGOR

சுங்கை பூலோ  தொகுதி ஏற்பாட்டில் பி40 பிரிவு மாணவர்களுக்கு ஓசேம் செயலி வழி இலவச மீள்பார்வை வசதி

கோத்தா டாமன்சாரா, பிப் 12- சுங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  வசதி குறைந்த பி40 பிரிவு மாணவர்கள் ஓசேம் செயலி வாயிலாக பாடங்களை 12 மாதங்களுக்கு இலவசமாக மீள்பார்வை செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள  தேர்வு எழுதக்கூடிய  சுமார் 5,000 பள்ளி மாணவர்கள் இந்த இலவச செயலியின் வழி பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா கூறினார்.

இதுவரை, ஆறு தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஏழு இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 1,422 மாணவர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

வசதி  குறைந்த மாணவர்களுக்கு உதவ முன்வந்த ஓசேம் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்தரப்பினரின் இந்த உதவி தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு ஒரளவு உதவியாக அமையும் என்றார் அவர்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையத்தில் இந்த ஓசேம் செயலியின் தொடக்க நிகழ்வில்  உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பி.எம்.ஆர்., பி.டி.3 மற்றும் எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஷேசமாக இந்த மீள்பார்வை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சுமார் 17,000 ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இரண்டாயிரம் கேள்விகள் ஓசேம் செயலி வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.


Pengarang :