MEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு மார்ச் மாதம் தொடங்கும்

கோலாலம்பூர், பிப் 14– பொது மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு  வரும் மார்ச் மாதம் தொடங்கும். இப்பதிவு சுயவிருப்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றம் புத்தாக்கத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மை செஜாத்ரா செயலி உள்பட ஐந்து வழிகளில் பொதுமக்கள் இதற்கான முன்பதிவைச் செய்யலாம் என்று அவர் சொன்னார்.

மை செஜாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்யாதவர்கள் பிரதமரால் அடுத்த வாரம் தொடக்கி வைக்கப்படவிருக்கும் கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்பு செயல்குழுவின் அகப்பக்கம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

இவை தவிர்த்து, பின்னர் அறிவிக்கப்படவிருக்கும் சிறப்பு ஹாட்லைன் எண்கள் மற்றும் கிளினிக்குகள், அரசாங்கம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாகவும் இப்பதிவை மேற்கொள்ள முடியும். உட்புறப்பகுதிகளில் வசிப்போர் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்படுவர் என்றார் அவர்.

முன்களப்பணியாளர்களை தொடக்க கட்ட இலக்காக கொண்டு இந்த கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கப்படும் என்று தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவ தெரிவித்தார்.


Pengarang :