ECONOMYSELANGORYB ACTIVITIES

இலவச கோவிட்-19 பரிசோதனை 50,000 பேர் இலக்கு மந்திரி புசார்

ர்

 

ஷா ஆலம், பிப் 22- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை முறியடிக்கும் முயற்சியாக சிலாங்கூர் மாநிலத்தில் ஐம்பதாயிரம் பேரை இலக்காக கொண்டு இலவச கோவிட்-19 இலவச பரிசோதனை இயக்கம் தொடரப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகள் மற்றும் குறைந்த வருமான பெறும் தரப்பினர்  வசிக்கும் இடங்களை இலக்காக கொண்டு இந்த இலவச  பரிசோதனைத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தின் வாயிலாக வசதி குறைந்தவர்களின் சுமையை குறைக்க இயலும், அது மட்டுமின்றி, நோய் பரவலை கட்டுப்படுத்தவும் முடியும் என்றார் அவர்.

நாம் நடத்துகின்ற ஒவ்வொரு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திலும் 500 முதல் 700 பேர் வரை கலந்து கொள்கின்றனர். இன்றைய பரிசோதனை நிகழ்வில் கூட அந்நோய் கண்ட ஐவரை இச்சோதனை மூலம் அடையாளம் கண்டோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 6இல் உள்ள சமூக மண்டபத்தில்  நடைபெற்ற  இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, இவ்வாரம் ஷா ஆலம், கிள்ளான், பூச்சோங், பெட்டாலிங் ஜெயாவில் மேலும் நான்கு இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கங்கள் நடத்தப்படவுள்ளதாக செல்கேர் நிறுவனத்தின் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

ஷா ஆலம், செக்சன் 28. கெனாங்கா மண்டபம், கோலக்கிள்ளான், பெண்டாமார் இண்டா 2, சமூக மண்டபம், பூச்சோங் இண்டாவில் உள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்ற மண்டபம், தாமான் டத்தோ ஹருண், எம்.பி.பிஜே. மண்டபம் ஆகியவற்றில் அந்த பரிசோதனை இயக்கங்கள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

 


Pengarang :