PENDIDIKANSELANGORYB ACTIVITIES

ஸ்ரீ செத்தியா தொகுதியிலுள்ள 500 பி40 பிரிவு மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் விநியோகம்

பெட்டாலிங் ஜெயா, பிப் 27– குறைந்த வருமானம் பெறும் (பி40 பிரிவு) குடும்பங்களைச் சேர்ந்த  500 மாணவர்கள் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து பள்ளி உபகரணப் பொருள்களைப் பெற்றனர்.

புத்தகப்பை, எழுது பொருள்கள் மற்றும்  பள்ளிச் சீருடை வாங்குவதற்கான 35 வெள்ளி பற்றுச் சீட்டு ஆகியவை அந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

பாலர் பள்ளிகள், முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புகள் வரும் மார்ச் மாதம் முதல் தேதி தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை முன்கூட்டியே தயார் படுத்துவதற்கு ஏதுவாக அந்த உபகரணங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

நாடு கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி சார்பாக வழங்கப்படும் இந்த உதவி வசதி குறைந்தவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க உதவும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் வழங்கியுள்ள 35 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி வரும் மே மாதத்திற்குள் அருகிலுள்ள மைடின் பேரங்காடிகளில்  பள்ளிச் சீருடைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :