SELANGOR

தரிசு நிலங்களில் உரப்பாசன முறையில் விவசாயம் செய்வீர்- மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச 16- பொதுமக்கள் தரிசு நிலங்களை முழுமையாக பயன்படுத்தி உரப்பாசன முறையில் பயிர் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

இதன் வழி வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள் இறக்குமதியைக் தவிர்க்கவும் அடிப்படை உணவுப் பொருள்களுக்கு உண்டாகும் செலவினத்தைக் குறைக்கவும் இயலும் என்றும் அவர் சொன்னார்.

சுமர் 1.121 ஹெக்டர் நிலத்தை வாடகைக்கு எடுத்து உரப்பாசன முறையில் விவசாயம் செய்து வரும் பத்து தீகா தொழில்முனைவோர் சங்கத்தின் நடவடிக்கையை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இங்கு முதல் கட்டமாக 2,000 மிளகாய் செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். காலவோட்டத்தில் இத்திட்டம் இதர வகை பயிர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று இங்குள்ள செக்சன் 18இல்  நகர்ப்புறத்தில் உரப்பாசன முறையில் மிளகாய்ச செடிகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஒரே விதமான காய்கறிகள் சந்தையில் மிதமிஞ்சி காணப்படுவதை தவிர்ப்பதற்காக காய்கறி பயரீட்டில் உரிய கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

ஒரே மாதிரியான உணவுப் பொருள் அதிகப்படியாக பயிரிடப்படுதை தவிர்ப்பதற்காக விவசாயத்தில் தரவு முறை அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :