ECONOMYSELANGOR

சிறு-நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவ வெ.50 லட்சம் இலக்கவியில் உதவித் தொகை ஒதுக்கீடு

ஷா ஆலம் மார்ச் 18- சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்கள் வர்த்தகத்தை இலக்கவியலுக்கு மாற்றுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் மாநில அரசு இலக்கவியல் இணைய உதவித் தொகையாக 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக 1,000 தொழில்முனைவோர் பயன் பெறுவர் என்று சிடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகம் கூறியது.

இத்திட்டத்தின் கீழ், மின் வர்த்தகம், மனித வளம், சம்பள முறை, கணக்கியல், இலக்கவியல் விற்பனை சந்தை போன்ற இணைய முறைகளில் சந்தாதாரர் ஆக விரும்புவோருக்கு அதிகப்பட்சம் 5,000 வெள்ளி அல்லது முதலீடுத் தொகையில் 50 விழுக்காட்டிற்கு இணையான தொகையை  மாநில அரசு வழங்கும்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு இலக்கவியல் தொடர்பான சேவைகைளை வழங்கும் நிறுவனங்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ் இணைந்து பணியாற்றுவதற்கு அத்துறையினர் விண்ணப்பம் செய்யலாம் என அக்கழகம் தெரிவித்தது.

இணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 51 விழுக்காடு மலேசியர்களின் பங்குரிமையைக் கொண்டதாகவும் சிலாங்கூரை தளமாக கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் செய்வதற்கான இறுதி நாள் ஏப்ரல் 15ஆம் தேதி ஆகும்.

 


Pengarang :