PBTSELANGOR

சுபாங் ஜெயா தொகுதியில் வெ.40,000 செலவில் இரு மேம்பாட்டுத் திட்டங்கள் அமல்

சுபாங் ஜெயா, மார்ச் 18– கடந்தாண்டு அக்டோபர் மாதம் முற்றுப்பெற்ற இரு அடிப்படை வசதித் திட்டங்கள் சுபாங் ஜெயா தொகுதி மக்களுக்கு பெரும் மனநிறைவைத் தந்துள்ளன.

யுஎஸ்ஜே 3சி வீடமைப்புப் பகுதியில் 19,990 வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட வேலிகள் அப்பகுதியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரிதும் துணை புரிந்துள்ளதாக தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் மிஷலி இ மேய் ஸீ கூறினார்.

வீடமைப்புப் பகுதியையும் நகர்ப்புற வனப் பூங்காவையும் பிரிக்கும் வேலிக்கு பதிலாக புதிய வேலியை அமைப்பதை இத்திட்டம் பிரதான நோக்கமாக கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

பொறுப்பற்ற நபர்களின் அத்துமீறல் காரணமாக அந்த வேலி சேதமடைந்ததோடு குற்றச்செயல்கள் அதிகம் நிகழ்வதற்கும் வாய்ப்பாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.

ஜாலான் எஸ்.எஸ்.15-2இ பகுதியில் உள்ள திடலைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி 19,993 வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்டாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :