ECONOMYNATIONALSELANGOR

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 19- சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான இரண்டாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை நேற்று  பெற்றனர்.

மாநில பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த அதிகாரிகள் உள்பட 42 பேர் இந்த தடுப்பூசியை ஷா ஆலம் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டனர். அவர்களுக்கு பைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் கடந்த மாதம் 25ஆம் தேதி முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 21 நாட்களுக்குப் பின்னர் அவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அந்த தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பான நிபந்தனைகளில் இந்த கால இடைவெளியும் அடங்கும்.

துணை சுகாதார அமைச்சர் 1 டத்தோ  டாக்டர் நோர் அஸ்மி கசாலி, பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட், மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன், மாநில  சுகாதார இயக்குநர் டத்தோ இண்ட்ரா டாக்டர் சஹாரி ஙடிமான் ஆகியோரும் இன்று தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.

மலேசிய தற்போது தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ளது. இத்திட்டம் கடந்த மாதம் 24ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பிப்ரவரி மாதம் முதல் வரும் ஏப்ரல் மாதம் வரை மேற்கொள்ளப்படும் முதல் கட்ட தடுப்பூசித் திட்டத்தில் சுமார் ஐந்து  லட்சம் முன்களப் பணியாளர்கள் தடுப்பூசியைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைபர்-பயோஎன்டெக் மற்று சினோவேக் தடுப்பூசிகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் மூத்த குடிமக்களை உள்ளடக்கிய 94 லட்சம் பேருக்கு செலுத்தப்படும். வரும் ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.


Pengarang :