MEDIA STATEMENTNATIONAL

மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விவேக மீட்டர் மற்றும் மைடி.என்.பி. செயலி ஒருங்கிணைப்பு உதவும்

கோலாலம்பூர், மார்ச் 22– குடியிருப்புகளில் மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் விவேக மீட்டர் மற்றும் மை.டி.என்.பி. செயலியின் ஒருங்கிணைந்த பயன்பாடு பெரிதும் துணை புரியும் என்பதோடு மின் விரயத்தையும் கட்டுப்படுத்தும்.

மலாக்காவில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விவேக மீட்டர் பொருத்தப்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த 24 விழுக்காட்டினர் தங்கள் வீடுகளில் மின்சார பயன்பாட்டை மை.டி.என்.பி. செயலி வாயிலாக கண்காணித்து வந்துள்ளதோடு மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கையாக தங்களின் மின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளதாக தெனாகா நேஷனல் நிறுவனத்தின் நவீன அடிப்படை மீட்டர் (ஏ.எம்.ஐ.) பிரிவின் திட்ட இயக்குநர் முகமது காவுஸ் அகமது கூறினார்.

மின்சார பயனீட்டை அளவிடும் கருவியாக இந்த விவேக மீட்டர் செயல்படுகிறது. மின் பயன்பாடு தொடர்பான தகவலை அது தினசரி டி.என்.பி. நிறுவனத்தித்ன மத்திய தரவு மையத்திற்கு அனுப்புகிறது என்று அவர் சொன்னார்.

மின்சார பயன்பாடு தொடர்பான தவல்களை மைடி.என்.பி. செயலி வாயிலாக பயனீட்டாளர்கள் பெற முடியும். இதன் வழி அவர்கள் மின் பயனீட்டை கட்டுப் படுத்துவதற்கும் சிக்கனமாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

இந்த விவேக மீட்டர்களைப் பொருத்தும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மலாக்காவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் இதுவரை 360,000 மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பணியை கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு விரிவு படுத்தும் நடவடிக்கையில் தாங்கள் தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :