BERNAMA
NATIONALSELANGOR

சிலாங்கூரில் செயற்கை மழை தேவையில்லை- லுவாஸ் கூறுகிறது

ஷா ஆலம், மார்ச் 31– சிலாங்கூரில் போதுமான அளவு  மழை பெய்வதால் இங்கு செயற்கை மழையை பெய்விக்க வேண்டிய அவசியமில்லை என்று லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கூறியது.

மழையை பெய்விப்பதற்காக  வானில் இரசாயன நீரை தெளிக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக இம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று அது தெரிவித்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நாம் செயற்கை மழையை பெய்விக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அதற்கு முந்தைய ஆண்டில் மட்டும் அந்நடவடிக்கையை மேற்கொண்டோம் என்று அந்த வாரியத்தின் இயக்குநர் ஹஸ்ரோல் நிஸாம் ஷாரி கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக அதாவது 410 முறை செயற்கை மழையை பெய்விக்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். 2016 இல் அந்த எண்ணிக்கை 266 ஆகவும் 201 7இல் 244 ஆகவும் இருந்தது என்றார் அவர்.

அனைத்துலக நீர் தினத்தை முன்னிட்டு சிலாங்கூர் மாநில நிலையில் நடத்தப்பட்ட நீர் மீதான ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆய்வரங்கு முகநூல் வாயிலாக நடத்தப்பட்டது.


Pengarang :