NATIONALPBTSELANGOR

கிள்ளானை பாரம்பரிய நகரமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

கிள்ளான், ஏப் 1- கிள்ளான் நகரம் பற்றி வரலாற்றுத் தவல்களையும் ஆவணங்களையும் திரட்டுவதற்காக கிள்ளான் நகாரண்மைக் கழகம் மலேசிய பழஞ்சுவடி காப்பகத்தின் உதவியை நாடியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனைஸ்கோவின் அனைத்துலக அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய நகரமாக கிள்ளானை பிரகடனப்படுத்துவற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று நகராண்மைக்கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜூடின் கூறினார்.

இந்த முயற்சியில் பல்வேறு ஆவணங்களையும் வரலாற்றுப் பதிவுகளையும் வைத்திருக்கும் பழஞ்சுவடி காப்பகம் உள்பட பல்வேறு தரப்பினரின் உதவி தங்களுக்கு தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

பாரம்பரிய நகருக்கான அந்தஸ்தை பெறுவதில் ஆவணங்கள் தவிர்த்து எங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கக்கூடிய அங்கீகாரம் பெற்ற அமைப்பான பழஞ்சுவடி காப்பகத்துடன் விவேக பங்காளித்துவத்தைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற இதன் தொடர்பிலான புரிந்துணர்வு குறிப்பில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கிள்ளான் நகரின் வரலாற்றைக் கண்டறிவதில் இவ்விரு அமைப்புகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு  ஆக்ககரமான பலனைக் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிகைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத் தலைநகராக ஷா ஆலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் மாநில நிர்வாக மையாக இருந்த கிள்ளான் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளையும் மையங்களையும் கொண்டுள்ளது.

லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் ஜாலான் துங்கு கிளானா, இரயில் நிலையம், கெடோங் ராஜா அப்துல்லா, ஜம்பத்தான் கோத்தா, சுல்தான் சுலைமான அரச பள்ளிவாசல், பழைய சாட்டர்டு வங்கி கட்டிடம், தீயணைப்பு நிலையம், இஸ்தானா ஆலம் ஷா  போன்றவை வரலாற்றுப்பூர்வ இடங்களில் சிலவாகும்.

 

 


Pengarang :