NATIONALPBTSELANGOR

இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டம் ஏப். 17ஆம் தேதி தொடங்கும்

புத்ரா ஜெயா, ஏப் 1– தேசிய தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் இயக்கம் முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விட இரு தினங்கள் முன்னதாகவே ஆரம்பிக்கப்படும்.

அந்த தடுப்பூசி இயக்கம் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17ஆம் தேதியே ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடாம் பாபா கூறினார்.

இந்த தடுப்பூசிப் பெறுவதற்கு மைசெஜாத்ரா செயலி வாயிலாக பதிந்து கொண்ட 70 லட்சம் பேரில் 30 விழுக்காட்டினர் மட்டுமே 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டவர்களாகவும் உள்ளதால் இந்த தரப்பிரை உட்படுத்திய பிரசார இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசி இயக்கதை தீவிரப்படுத்துவதற்கு ஐந்து வழிமுறைகளை கையாள வேண்டியுள்ளது. மைசெஜாத்ரா செயலி அல்லது சுகாதார அமைச்சின் அகப்பக்கம், ஹோட்லைன் தொலைபேசி சேவை, வீடற்றவர்கள் மற்றும் சட்டவிரோத அந்நிய குடியேறிகளை கண்டறியும் நடவடிக்கையில் அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்பை நாடுவது மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் நேரடியாக பதிந்து கொள்வது ஆகியவையே அந்ந வழிமுறைகளாகும் என்றார் அவர்.

சுமார் 94 லட்சம் பேரை இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கம் இலக்காக கொண்டுள்ளது. மூத்த குடிமக்கள், நோய்த்  தாக்கம் அதிகம் கொண்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி இயக்கத்தில் இடம் பெற்றுள்ளனர்.

சீனாவிலிருந்து கேன்சீனோ கோவிட்-10 தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் சொலுஷன்ஸ் பயோலோஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் சடங்கை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் ஆடாம் பாபா இதனைத் தெரிவித்தார்.


Pengarang :