ECONOMYSELANGOR

பலவீனமான அரசாங்கத்தை பிற நாடுகள் கருவியாக பயன்படுத்தும்- அன்வார் எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப் 4- பெரிக்காத்தான் நேஷனல்  (தேசிய கூட்டணி) அரசாங்கத்தின் பலவீனம் மலேசியாவுடன் நட்புறவு பாராட்டி லாபம் ஈட்டிக்கொள்வதற்குரிய வாய்பினை எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

மலேசியாவின் அந்தஸ்து, பொருளாதாரம் மற்றும் மக்களின் சுபிட்சத்திற்கு மிகவும் ஆழமான விளைவுகள் இதனால் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

நமது நாட்டின் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட ‘மூத்த அண்ணன்‘ என்ற வார்த்தை மலேசிய-சீன உறவில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் பல முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தவறான முடிவை எடுத்துள்ளதோடு இத்தகைய போக்கு தொடர்ந்து அதிகரித்துக்  கொண்டே போகிறது என்றும் அவர் கூறினார்.

மலேசியா இனியும் அணி சேரா நாடு  அல்ல என்ற மறைமுகத் தகவலை இன்றைய ஆட்சியாளர்கள் உலகிற்கு பறைசாட்டியுள்ளனர் என்ற  நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.

மூத்த அண்ணன் விவகாரத்தினால் ஏற்பட்ட குழப்பத்தை மூடி மறைப்பதற்கு பெரிக்கத்தான் நேஷனல்  அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆசியான் மற்றும் சீனா தொடர்பான விவகாரங்களில் அரசதந்திர மற்றும் வியூக ரீதியில் அது பலவீனப்பட்டு கிடப்பதை புலப்படுத்துகிறது என்றார் அவர்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் ஜனநாயக நடைமுறைக்கு வழிவிட்டு பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதோடு ஆட்சியில் நீடிப்பதற்கு அவசரகால பிரகடனத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினா


Pengarang :