ECONOMYSELANGOR

நீர் மறுபயனீட்டுத் துறையை மேம்படுத்துவதில் ஆயர் சிலாங்கூர்-இண்டா வாட்டர் தீவிரம்

கோலாலம்பூர், ஏப் 10– தொழில்துறைகளின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நீரை பயனீட்டுக்கு உகந்த நீராக மாற்றும் திட்டத்தை தொடர ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் இண்டர் வாட்டர் குழுமமும் உறுதி கொண்டுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள பந்தாய் டாலாம் 2 மற்றும் ஷா ஆலமில் உள்ள செக்சன் 23 கழிவு நீர் சேகரிப்பு மையங்களை உட்படுத்திய இதர வகை ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து சென்ட்ரல் வாட்டர் ரிகிலமேஷன் சென். பெர்ஹாட் நிறுவனம் ஆராயவிருப்பதாக அவ்விரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நாட்டின் நீர் தொழில்துறையை ஆக்ககரமனதாக உருவாக்குவதில் ஆயர் சிலாங்கூர் மற்றும் இண்டா வாட்டர் நிறுவனங்கள் கொண்டிருக்கும் நீண்ட கால கடப்பாடு இதுவாகும் என அந்த அறிக்கை தெரிவித்தது.

2017-2030 ஆம் ஆண்டிற்கான பசுமைத் தொழில்நுட்ப பெருந்திட்டத்தின் கீழ் வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சுத்திகரிக்கப்படும் மொத்த நீரில்  33 விழுக்காட்டை மறுசூழற்சி செய்வதை அந்நிறுவனம் இலக்காக கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் மறுயனீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக விஷேசமாக தொடக்கப்பட்ட சென்ட்ரல் வாட்டர் நிறுவனத்தில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் 60 விழுக்காட்டு பங்குரிமையையும் இண்டா வாட்டர் நிறுவனம் 40 விழுக்காட்டு பங்குரிமையையும் கொண்டுள்ளன.

இண்டா வாட்டர் கழிவு நீரை மறுசூழற்சி செய்து தொழில்துறையின் பயன்பாட்டிற்கு  விநியோகம் செய்வதை நோக்கமாக கொண்டு கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.


Pengarang :