ECONOMYSELANGOR

2030ஆம் ஆண்டிற்குள் 60,000 கட்டுபடி விலை வீடுகள் நிர்மாணிப்பு- சிலாங்கூர் அரசு இலக்கு

உலு சிலாங்கூர், ஏப் 11- மேம்பாட்டாளர்கள் கட்டுபடி விலையிலான வீடுகளைக் கட்டுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய சொத்துடைமைத் துறையின் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்த முடியும்.

சிலாங்கூர் கூ வீடுகளுக்கான ஏ,பி,சி, மற்றும் டி பிரிவுகளை ஒரே பிரிவாக மாற்றுவதற்குரிய வாய்ப்பினை சிலாங்கூர் கூ ஹராப்பான் வீடமைப்புத் திட்டம் வழங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குறைந்த பட்சம் ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான சிலாங்கூர் கூ வீடுகள் அனைத்து அடிப்படை வசதிகளுடன் 250,000 வெள்ளிக்கும் மேற்போகாத விலையில் விற்கப்படுவதாக அவர் சொன்னார்.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் 60,000 கட்டுபடி விலையிலான வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஏதுவாக வீடமைப்பாளர்களுக்கு விலக்களிப்பு வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள தாமான் பூங்கா ராயாவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டரை லட்சம் வெள்ளி மதிப்பிலான சிலாங்கூர் கூ ஹராப்பான் வீடுகளுக்கான சாவிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

700 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரையிலான பரப்பளவில் ஏ,பி,சி,டி, மற்றும் இ என்ற ஐந்து வகை சிலாங்கூர் கூ ஹராப்பான் வீடுகள் 42,000 வெள்ளி முதல் 250,000 வெள்ளி வரையிலான விலையில் விற்கப்படுகின்றன.


Pengarang :