ECONOMYSELANGOR

திறன் அடிப்படையில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு

ஷா ஆலம், மே 1– ஆள்பலச் சந்தையின் தேவைக்கேற்ற திறன் அடிப்படையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 முதல் 15,000 பேர் வரை பகுதி நேரமாக வேலை செய்தவதற்குரிய வாய்ப்பினை பெறுவர்.

மாநிலத்தில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் வேலை ஆள்பலச் சந்தை முக்கிய பங்கினை ஆற்றுவதாக மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமை செயல்முறை அதிகாரி சோஃப்பான் அப்பாண்டி அமினுடின் கூறினார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கு நமக்கு திறன்பெற்ற மனித ஆற்றல் தேவைப்படுகிறது. மாநிலத்தை முன்னணி முதலீட்டு மையமாக உருவாக்குவதற்கு இதுவே சிறந்த வழிமுறையாக விளங்குகிறது என்றார் அவர்.

வேலை சந்தையில் தேவைக்கு ஏற்ற திறனைக் தொழிலாளர்கள் கொண்டிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். அந்நிய முதலீட்டாளர்கள் இங்கு வர்த்தகத்தை தொடங்கும் போது அந்த வர்த்தகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் திறன்மிக்க மனித ஆற்றல் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் கெர்ஜாயா எனப்படும்  வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 6,000 பேர் வேலை  வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாகவும் மூன்றாம் காலாண்டில் இவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது தெரியவரும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆள்பலச் சந்தையின் தேவைக்கேற்ப உயர் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கில் இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசு 7 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :