ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நான்கு ஆண்டுகளில் 80,000 கட்டுபடி விலை வீடுகள்

ஷா ஆலம், மே 1- அடுத்த நான்கு ஆண்டுகளில் 80,000 சிலாங்கூர் கூ மற்றும் சிலாங்கூர் இடாமான் மற்றும் ஹராப்பான் வீடுகள் கட்டப்படும். இத்திட்டங்களின் வாயிலாக மாநில அரசின் பொருளாதாரத்திற்கு சுமார் 1,700 கோடி வெள்ளி வருமானமாக கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும்.

இத்தகைய திட்டங்களின் வாயிலாக மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு நீண்ட கால அப்படையில் வலுவூட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மந்திரி புசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமை செயல்முறை அதிகாரி சோஃப்பான் அப்பாண்டி கூறினார்.

இத்திட்டங்களின் வாயிலாக கட்டுமானம், வேலை வாய்ப்பு மற்றும் நிதிப்புழக்கம் ஆகியவை துடிப்புடன் செயல்படுவதற்கும் மக்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

நீடித்த பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பேங்க் நெகாராவின் 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. இவ்வாண்டிற்கான  நாட்டின் பொருளதார வளர்ச்சி 6  முதல் 7.5 விழுக்காடு வரை இருக்கும் என அது கணித்துள்ளது என்றார் அவர்.

45,000 வீடுகளை உள்ளடக்கிய இடாமான் வீடமைப்புத் திட்டத்தை எம்.பி.ஐ. மேற்கொண்டு வரும் வேளையில் எஞ்சிய ஹராப்பான் திட்ட வீடுகளை சிலாங்கூர் மாநில  வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் நிர்மாணித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயிரம் சதுரஅடி கொண்ட அந்த ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை மாதம் 10,000 வெள்ளி குடும்ப வருமானம் பெறுவோர் வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :