PBTSELANGOR

செலாயாங்கில் கார் கழுவும் மையம், வழிபாட்டுக் குடில்கள் உடைக்கப்பட்டன

ஷா ஆலம், மே 5- அனுமதியின்று கட்டப்பட்ட மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மூன்று  வழிபாட்டுக் குடில்கள் செலாயாங் நகராண்மைக் கழகத்தால் உடைக்கப்பட்டன.

பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில்  கெப்போங், தாமான் ஏசான் மற்றும் செலாயாங் உத்தாமாவில் இருந்த அந்த வழிபாட்டுக் குடில்கள் உடைக்கப்பட்டதாக நகராண்மைக் கழகத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநர் முகமது ஜின் மசூட் கூறினார்.

செலாயாங் நகராண்மைக்கழகம் மேற்கொள்ளும் மூன்றாவது நடவடிக்கை இதுவாகும். கடந்த மாதம் 18 மற்றும் 26ஆம் தேதிகளில் தாமான் ஸ்ரீ பத்துகேவ்ஸ் மற்றும் ரவாங் ஒருங்கிணைந்த தொழில்பேட்டைப் பகுதியில் இத்தகைய இரு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார் அவர்.

1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிட சட்டத்தின் 46(1)ஏ பிரிவின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கே.பி.ஐ. தொழில்பேட்டை   பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த  கார் கழுவும் மையம் ஒன்று இந்நடவடிக்கையின் போது உடைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கையை நகராண்மைக்கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும் அவர் என்றும் அவர் கூறினார்.


Pengarang :