ECONOMYHEALTHSELANGOR

கோவிட்-19 நோய்த் துடைத்தொழிக்க இலவச பரிசோதனையில் பங்கு கொள்வீர்- ஹீ லோய் சியான் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மே-25 மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோயின் சங்கிலித் தொடர்பை துண்டித்து  நோயிலிருந்து முற்றாக விடுபடுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மாநில அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வாய்ப்பினை பொது மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக நோய்த் தொற்றுக்கான அறிகுறியை எதனையும் கொண்ராதவர்களும் இந்த சோதனையில் பங்கேற்பது அவசியமாகும் என்றார் அவர்.

நோய்க்கான அறிகுறியை கொண்டிராதவர்களால் பிறருக்கு எளிதில் நோய் பரவுவதை தடுப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.

இங்குள்ள புக்கிட் காசிங் தொகுதியில் நேற்று  நடைபெற்ற இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56  தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு நடத்தி வருகிறது.


Pengarang :