HEALTHMEDIA STATEMENTNATIONAL

நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்வீர்- பொது மக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 2- கோவிட்-19 நோய்க்கான அறிகுறி தென்பட்டால் அல்லது அந்நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி பொதுமக்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டால் மைசெஜாத்ரா செயலி வாயிலாக அல்லது அருகிலுள்ள சுகாதார மையங்களில் அது குறித்து தகவல்  தெரிவிக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

இது தவிர, அருகிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்கு (சிஏசி) பரிசோதனை முடிவுகளை கொண்டு வரும் பட்சத்தில் அங்கு மேல் நடவடிகைகளை எடுப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நோயாளிகளை வீட்டு மதிப்பீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி வீடுகளில் தனிமைப்படுத்துவதா? மற்றும் நோயின் தாக்கம் கடுமையாகும் சாத்தியம் உள்ளதா? என்பதை மதிப்பீடு செய்யும் பணியை இந்த சிஏசி மையங்கள் மேற்கொள்வதாக அவர் சொன்னார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு வழிகாட்டுதலையும் தகவல்களையும் தொடர்ந்து வழங்கி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :