HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், ஜூன் 23– தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகும் இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் நோய்ப் பரவல் அதிகமாக காணப்படுவதற்கு அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காரணமாக இருக்கும் சாத்தியம் உள்ளதால் அடுத்தக் கட்ட பரிசோதனை இயக்கத்தில் அவ்விடங்கள் இலக்காக கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்.டி.எப்.ஒ. எனப்படும்  சிலாங்கூர் மாநில கோவிட்-19 சிறப்பு பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

மூன்றாம் கட்ட பரிசோதனை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ஸ்ரீ செத்தியா தொகுதி தவிர்த்து இதர அனைத்து தொகுதிகளிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை ஆறு விழுக்காட்டிற்கும் மேல் இருந்ததாக அவர் சொன்னார்.

வட்டார மக்களிடையே நோய்த் தொற்று இன்னும் அதிகமாக இருப்பது இது வரை ஐந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை வழி தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர்  மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நோய்த் தொற்று உள்ளவர்களை அடையாளம் காண்பதில் பெரிதும் துணை புரிகிறது. நோய்ப் பரவலைக் குறைப்பதற்கு ஏதுவாக நோய்த் தொற்று உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிவதுதான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றார் அவர்.


Pengarang :