HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19- அதிகமான முன்களப் பணியாளர்கள் கடுமையான மன அழுத்தப் பிரச்னையால் பாதிப்பு

ஷா ஆலம், ஜூன் 28- கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் ஏற்பட்ட பணிச் சுமை காரணமாக 893 சுகாதாரப் பணியாளர்களில் 39.1 விழுக்காட்டினர் கடுமையான மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய மன அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள்  மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நீண்ட நாட்களுக்கு 100 விழுக்காடு முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் காரணமாக அவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மருந்தக அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களில் 53.8 விழுக்காட்டினர் மத்தியில் சுய மன அழுத்தப் பிரச்னை அதிகம் காணப்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

கீழ்க்கண்ட காரணங்களால் சுகாதாரப் பணியாளர்கள் கடும் மன அழுத்தப் பிரச்னையை எதிர்நோக்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

  1. பணியிடங்களில் மனோவியல் ரீதியிலான ஆதரவு போதுமான அளவு இல்லாதது
  2. கடுமையான வேலைப் பளு
  3. முடிவின்றி தொடரும் கோவிட்-19 நோய்த் தொற்றின் பாதிப்பு
  4. அடிக்கடி மாற்றப்படும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்வாக நடைமுறைகளுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்
  5. வேலை திட்டமிடலில் ஏற்படும் இடையூறு

6 வேலை மற்றும் குடும்பத்தை சரிசமமாக கவனிக்க முடியாத இக்கட்டான நிலை. 


Pengarang :