ECONOMYHEALTHNATIONALPBT

சிலாங்கூரிலுள்ள 34 துணை மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கி பி.கே.பி.டி. அமல்

ஷா ஆலம், ஜூலை 1– சிலாங்கூரிலுள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள 34 முக்கிம்களில் (துணை மாவட்டங்கள்) கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் சனிக்கிழமை தொடங்கி அமல்படுத்தப்படும்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான இந்த ஆணை 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த இரு வார காலத்தில் நோய்த் தொற்றைக்  கட்டுப்படுத்த இயலாவிட்டால் அந்த ஆணை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அவர் சொன்னார்.

கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட முக்கிம்கள் வருமாறு-

பெட்டாலிங் மாவட்டம் – பெட்டாலிங், சுங்கை பூலோ, புக்கிட் ராஜா

உலு லங்காட் – உலு லங்காட், அம்பாங், செராஸ், காஜாங், செமினி, பெரேனாங்

சிப்பாங்- டெங்கில், லாபு, சிப்பாங்

கோம்பாக்- பத்து, ரவாங், ஸ்தாப்பாக்,  உலு கிளாங், குவாங்

கோல லங்காட்- தஞ்சோங் 12(1), தஞ்சோங் 12(2), தொலுக் பங்ளிமா காராங், மோரிப், பண்டார் ஜூக்ரா, பத்து

கிள்ளான்- காப்பார், கிள்ளான்

கோல சிலாங்கூர் – ஈஜோக், பெஸ்தாரி ஜெயா, ஜெராம்

உலு சிலாங்கூர்- செரண்டா, ராசா, உலுயாம், பத்தாங் காலி

சிலாங்கூரில் தினசரி 1,800 முதல்  2,000 கோவிட்-19 சம்பவங்கள் வரை பதிவாவதாக இஸ்மாயில் சப்ரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100,000 பேருக்கு 12.1 பேர் என்ற அளவில் கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :