EKSKLUSIFHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்றப்  பின்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை? சுகாதார அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 26– கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி பெரிதும் துணை புரிகிறது. தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் வாயிலாக  நோய்த் தொற்றின் கடும் பாதிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இருந்த போதிலும், இந்த தடுப்பூசி சில தற்காலிக பக்க விளைவுகளை ஏற்படுத்துவதையும் மறுப்பதற்கில்லை. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டியை பின்பற்றி நடந்தால் அந்த பாதிப்புகளிலிருந்து  நம்மை  பாதுகாத்துக கொள்ளலாம்.

நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு ஒரு வார காலம் பிடிக்கும் என்பதால் தடுப்பூசி பெற்றவர்கள் அக்காலக்கட்டத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இது தவிர, சிலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மயக்கம், மூட்டு வலி, சோர்வு மற்றும் நடுக்கம் ஏற்படலாம்.

தடுப்பூசி பெற்றப் பின்னர் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டி பின்வருமாறு-

எதிர்பாராத அறிகுறிகள்

  • தடுப்பூசி பெற்ற அனைவருக்கும் எதிர்பாராத விளைவுகள் ஏற்படாது.
  • பெரும்பாலானோருக்கு கீழ்க்கண்ட லேசான அறிகுறிகள் தென்படும் என்பதோடு அவை விரைவில் குணமாகி விடும்.

(அ) தடுப்பூசி செலுத்தப்பட்ட இடம் சிவந்து போவது, புண் அல்லது வீக்கம் (ஆ) மயக்கம், தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி

(இ) சோர்வு

(ஈ) காய்ச்சல்

(உ) மயக்கம்

  • இத்தகைய அறிகுறிகள் நீங்கும் வரை வாகனம் ஒட்டுவது அல்லது இயந்திரங்களை இயக்குவதைதவிர்க்கவும்
  • வியர்வை சுரப்பிகளில் வீக்கம் உண்டாவது அரிதாகவே நடக்கும்
  • அரிப்பு, மூச்சுத் திணறல், முகம் அல்லது நாக்கில் வீக்கம்
  • இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

காய்ச்சல் ஏற்பட்டால் என்ன செய்வது?

  • தடுப்பூசி செலுத்தப்பட்ட 48 மணி நேரத்திற்குள் காய்ச்சல் ஏற்படலாம்.
  • கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவும்

(அ) 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால்

(ஆ) கோவிட்-19 நோய்த் தொற்று கண்டால்

(இ) கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுடன் தங்கியிருந்தால்

(ஈ) நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தால்

எதிர்பாராத அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்வது?

  • மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்
  • தேசிய மருந்தக ஒழுங்கு முறை அமைப்பிடம் புகார் செய்ய மருத்துவப் பணியாளர்கள் உதவி புரிவர்.
  • இத்தகைய எதிர்பாராத அறிகுறிகள் தொடர்பில் என்ற www.nrpa.gov.my அகப்பக்கம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம்.

கீழ்க்கண்ட கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்கவும்

  • பந்து மற்றும் மட்டையை உட்படுத்திய விளையாட்டுகள்
  • சைக்கிளோட்டம்
  • நீச்சல்
  • பளு தூக்குதல்
  • ஓட்டம் அல்லது மெதுவோட்டம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

(அ) மூச்சுத் திணறல்

(ஆ) கடுமையான நெஞ்சு வலி அல்லது இறுக்கான உணர்வு

(இ) இருதய படபடப்பு

 

தகவல் ஆதாரம்-

மலேசிய சுகாதார அமைச்சின் முகநூல், 13 ஜூலை 2021


Pengarang :