ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 1.7 கோடி தடுப்பூசிகளை மலேசியர்கள் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஜூலை 26– தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் இயக்த்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நாடு முழுவதும் 1 கோடியே 73 லட்சத்து 17 ஆயிரத்து 553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு 11.59 மணி வரை நாடு முழுவதும் 55 லட்சத்து 19 ஆயிரத்து 845 பேர் அதாவது நாட்டு மக்கள் தொகையில் 16.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

மேலும், 36.1 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரத்து 708 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று நாட்டில் 399,135 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறிய அவர், அவர்களில் 281,481 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 117,654 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றதாக கூறினார்.


Pengarang :