ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டம்- ஸ்ரீ செத்தியா தொகுதியில் 2,600 பேர் தடுப்பூசி பெறுகின்றனர்

ஷா ஆலம், ஜூலை 31– சிலாங்கூர் மாநில அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ்  ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 2,600 பேர் தடுப்பூசி பெறுகின்றனர்

கடந்த வாரம் தொடங்கி இன்று வரை நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் சட்டப்பூர்வ அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் உள்நாட்டினர் சினோவேக் தடுப்பூசியை  பெறுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்த இலவச தடுப்பூசித் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தில் பதிவு செய்த சிலருக்கும் இங்கு தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைத்த காரணத்தால் நேற்று கூட்டம் சற்று அதிகமாக இருந்தது என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்றிலிருந்து நாடு விரைந்து விடுபடுவதற்கு ஏதுவாக கூடுமானவரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசு செல்வேக்ஸ் இண்டஸ்ட்டீஸ் தொழில் துறையினருக்கான தடுப்பூசி திட்டத்திற்காக  20 லட்சம் தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது. இதன் வழி பத்து லட்சம் தொழிலாளர்கள் தடுப்பூசி பெற முடியும். 

அதேசமயம், செல்வேக்ஸ் கம்யூனிட்டி எனப்படும் பொதுமக்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஐந்து தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 


Pengarang :