ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலசிலாங்கூரின் முழு ஆற்றல் வெளிகொணர மாநில அரசு உதவும்

ஷா ஆலம், ஆக 21 : கோலா சிலாங்கூரில் உள்ள ஸ்கை மிரர் அதன் தனித்துவத்தின் காரணமாக ஒரு சர்வதேச சுற்றுலாத் தலமாக உருவாக்கலாம், இது பொலிவியாவில் உள்ள சலார் டி உயூனியுடன் ஒப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி “கண்ணாடியைப் போன்ற உருவத்தின் எதிரொளிப்பு தனித்துவமானது, உலகின் மிகச் சிறந்த ஒன்றாகும்,” மேலும் இது எளிதில் சென்று பார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது என்றார்.

“பொலிவியாவிலுள்ள அந்த இடத்தை அடைய மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும், ஆனால் கோலா சிலாங்கூரில் உள்ள ஸ்கை மிரரை 30 நிமிடங்களில் அடைய முடியும். “தொற்றுநோய்க்கு முன், ஒரு மாதத்திற்கு 15,000 முதல் 20,000 சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அங்குள்ள பல கவர்ச்சி இடங்களுடன் உணவும் சுவையாக உள்ளது,” என்று அவர் நேற்று இரவு மூவர் சம்பாஷணை நிகழ்ச்சியில் கூறினார்.

இந்த நிகழ்ச்சி முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது, நன்கு அறியப்பட்ட மூன்று தொகுப்பாளர்களான ஹலிம் ஓத்மான், லிண்டா ஒன் மற்றும் குட்சியா கஹார். கோலா சிலாங்கூரின் மேம்பாடில் விவசாயத்தை விடுத்து மற்ற துறைகளின் வளர்ச்சியிலும், குறிப்பாக சுற்றுலா கவர்ச்சியை அதிகரிக்க, மாநில அரசு கவனம் செலுத்துவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த ஆண்டின் இறுதியில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப் பட்டபோது, ​​ச்சுத்தி- விடுமுறையில் உங்கள் சிலாங்கூரை முதலில் அறிந்துக் கொள்ளுங்கள்! என அழைப்பு விட்டோம்.

குடும்ப விடுமுறைக்கு செல்லும் இடமாக கோலா சிலாங்கூரைத் தேர்ந்தெடுக்கும் போது  உள்ளூர் கவர்ச்சிகள் கண்ணில் படும். அவர் புக்கிட் மலாவத்தி, அரச கல்லறை (ராயல் டோம்ப்) , ஃபயர்ஃபிளை சரணாலயம், கோலா சிலாங்கூர் கோ கார்ட் பந்தய உலா, மற்றும் கம்பங் குவாண்டனில் இரால் மீன்பிடிக்கச் சென்றதைத் தவிர ஸ்கை மிரரை குடும்பத்துடன் பார்வையிட்டலாம் என்று தனது அனுபவத்தை   பகிர்ந்துக்கொண்டார்.

 


Pengarang :