Datuk Seri Anwar Ibrahim dua, kanan) mempengerusikan Mesyuarat Bulanan Majlis Presiden PAKATAN di ibu pejabat KEADILAN pada 28 September 2020. Foto Facebook Anwar Ibrahim
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாட்டுக்கு ஏற்படும் அழிவை விட- ஆட்சி, பதவி, அதிகாரத்தில் சில கட்சிகள் குறி – பக்காத்தான் சாடல்

ஷா ஆலம், 23 ஆக : பக்காத்தான் ஹரப்பானில் உள்ள அனைத்து கட்சிகளும் (பக்காத்தான்) டத்தோஸ்ரீ அன்வர் இப்ராகிமின் தலைத்துவத்திற்கு ஒத்துழைப்பை வழங்கி அதை மேலும்  வலுப்படுத்த உறுதியாக உள்ளன.

ஒரு அறிக்கையின் வழி, தலைத்துவ கவுன்சில் மக்களின் நலன் கருதி சீர்திருத்த போராட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப ‘’அகண்ட தலைமைத்துவம்’’ என்ற கருத்தின் கீழ் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் ஒன்றாக வேலை செய்ய தயாராக இருப்பதாக கூறியது.

பார்ட்டி கெஅடிலன் ராக்யாட் (KEADILAN) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமது சாபு மற்றும் DAP பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இணைந்து விட்ட அறிக்கை படி,

“எதிர் கட்சி கூட்டணி உறுப்பினர்கள் மத்தியில் ‘ அகண்ட தலைமைத்துவ ‘ முறையின் மூலம் ஆற்றலை ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்க வேண்டும்.

நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் தீங்கு மற்றும் நஷ்டங்களை கருத்தில் கொள்ளாமல்; ஆட்சி, பதவி, அதிகாரத்தை கைப்பற்ற சில கட்சிகள் கையாளும் அரசியல் விளையாட்டுகள் நாட்டுக்கு பெரும் அழிவைக் கொண்டுவரும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

அடுத்த பொதுத் தேர்தலில் (GE) மக்கள் ஆணையை மீண்டும் பெறுவதில் அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தவும் பக்காத்தான் உறுதி பூண்டுள்ளதாக கூறியது.

“GE15 க்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்படும், அதில் போட்டியிடும் தொகுதிகள், கொள்கை அறிக்கை, தலைமை மற்றும் வேட்பாளர்கள் பற்றிய விவாதங்கள், அத்துடன் மக்கள் ஆணையை வெல்வதற்கான உத்திகள் ஆகியவை அதில் அடங்கும்,” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தேசிய நடவடிக்கை மன்றம்  (MPN) மற்றும் கோவிட் -19 ஐ எதிர்கொள்வதற்கான சிறப்பு குழுவில் எதிர்க்கட்சிகளின் ஈடுபாடு குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் அழைப்பை பற்றி இந்த அறிக்கையில் எதுவும் கூறப் படவில்லை.


Pengarang :