ECONOMYNATIONAL

சரவாவில் நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தடுப்பூசியின் செயல்திறன் குறைந்தது காரணமா? 

புத்ரா ஜெயா, செப் 10- சரவா மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்புக்கு கோவிட்-19 தடுப்பூசியின் செயல் திறன் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறைவது ஒரு காரணமாக இருப்பதற்குரிய சாத்தியத்தை சுகாதார அமைச்சு மறுக்கவில்லை.

ஆகவே, மூத்த குடிமக்கள், கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாவது அதாவது ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவற்கு மேலை நாடுகள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக கூறிய அவர், அதனை தாங்களும் பின்பற்றுவதற்குதிரிய சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்றார்.

நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கோவிட்-19 தடுப்பூசியின் ஆக்கத்திறன் குறைந்து வருவதற்கான சாத்தியம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

சரவா மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இம்மாநிலத்தில் 3,118 சம்பவங்கள் பதிவாகின.

சரவா மாநிலத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக தாம் அடுத்த வாரம் அம்மாநிலத்திற்கு வருகை மேற்கொள்ளவுள்ளதாக கைரி குறிப்பிட்டார்.

 


Pengarang :