ECONOMY

சிலாங்கூரில் நாளைத் தொடங்கி நடமாடும் தடுப்பூசி திட்டம்

ஷா ஆலம், 11 செப்டம்பர்: சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) மாநிலத்தின் எந்த குடிமகனும் தடுப்பூசிகளைப் பெறுவதில் இருந்து விடுபடாமலிருப்பை உறுதிசெய்ய, நாளை தொடங்கி, செப்டம்பர் 18 வரை தொடரும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், 11 மாநில சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய (DUN) இத்திட்டம், ஒரு வார காலம் நடைபெறும், அது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்  என்றார்.

சம்பந்தப்பட்ட தொகுதிகள் மேரு, பத்துதீகா, தஞ்சோங் சிப்பாட், உலு பெர்ணம், கோம்பக் செத்தியா, புக்கிட் அந்தாரபங்சா, பத்தாங் காளி, பந்திங், தெராத்தாய், டெங்கில் மற்றும் கம்போங் துங்கு ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

“தடுப்பூசி பெறாதவர்களை, கோவிட் -19 தடுப்பூசியை இலவசமாகப் பெற அருகிலுள்ள இடத்திற்கு நேரடியாக வருமாறு அழைக்கப் படுகிறார்கள்,” என்று அவர் பேஸ்புக்கில் நேற்று, டாக்டர் சித்தி மரியா கூறினார்,.

இந்த திட்டம் அனைத்து சிலாங்கூர் குடிமக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது, ஒரு நாளைக்கு 1,000 நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளது. ஆகஸ்ட் 24 அன்று, தடுப்பூசி போடப்படாத நபர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடமாடம் கிளினிக் வழி தினம் 1,000 நபர்களுக்கு தடுப்பூசி போடும் அடிப்படையில் இந்த திட்டம் வழி வகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :