ECONOMYPENDIDIKAN

சிலாங்கூரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது

ஷா ஆலம், 12 செப்டம்பர்: கல்வி அமைச்சு (MOE) அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பள்ளி முகப்பு அமர்வை தொடங்கும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, அமர்வுகள் தேசிய மீட்சித்  திட்டத்தின் (பிபிஎன்) கட்டங்களின் படி மற்றும் சுழற்சி முறையில் செயல் படுத்தப் படவுள்ளன. இரண்டு, மூன்று மற்றும் நான்கு கட்டங்களில் உள்ள மாநிலங்கள் மட்டுமே வயது நிலைக்கு ஏற்ப பள்ளி அமர்வுகளைத் தொடங்கும்.

பள்ளிக்கு மாணவர்களின் வருகை வாராந்திர மொத்த சேர்க்கையில் 50 சதவீதமாகும். தொற்று அளவில் முதல் கட்ட நிலைகளில் உள்ள மாநிலங்களில் பள்ளிகள், அதாவது கெடா மற்றும் ஜோகூர் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும், மேலும் வீட்டில் (பி.டி.பி.ஆர்) அமர்வுகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் தொடரும்.

பள்ளியின் செயல்பாடு பற்றிய இதர தகவல்கள் இங்கே: –

இந்த ஆண்டுக்கான பள்ளி அமர்வு மார்ச் 2022 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது-

மாணவர்களுக்கு முகக்கவரி பயன்படுத்துவது பள்ளியில் கட்டாயமாகும்.

தொற்று அறிகுறிகள் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவதில்லை.

மாணவர்கள் சீருடை இல்லாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகிறார்கள், ஆனால் ஆடை பொருத்தமானதாகவும், கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும்


Pengarang :