MEDIA STATEMENTNATIONAL

செல்வாக்ஸ் மொபைல் திட்டத்தில், இலவச தடுப்பூசி அளவுகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசிடம் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, 18 செப்டம்பர்: சிலாங்கூர் தடுப்பூசி (செல்வாக்ஸ்) மொபைல் திட்டத்தில் இலவச தடுப்பூசி அளவுகளின் ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசிடம் கோரிக்கை  வைக்கப் பட்டுள்ளது. பலருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

மொபைல் செல்வாக்ஸ் (SELangkah) திட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி டோஸ்களுக்கு  அதிகமானவர்கள் பதிவு   செய்ய முன் வருவதே அதன் காரணம் என்று கம்பொங் துங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி, கம்பொங் துங்கு பகுதிக்கு ஒதுக்கப்பட்ட  600 மொத்த தடுப்பூசிகளில் பாதிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ் பயன்படுத்தப் பட்டு விட்டது.

“பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், நாமும் ​ தொற்று நோயிலிருந்து மறைமுகமாக நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம் என்ற நிம்மதி அடைந்தோம்,” என்று அவர் கூறினார்.

செல்வாக்ஸ் திட்டத்தில் இலவச தடுப்பூசிகளின் அளவை அதிகரிக்கும் முயற்சி, மந்தை தொற்று நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான நாட்டின் முயற்சிகளை துரிதப் படுத்தும்  என்றார்.

இன்று சுங்கை வே இரவு சந்தை தளமான ஜலான் எஸ்எஸ் 9 ஏ/12 இல் செல்வாக்ஸ் மொபைல் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியின்  சந்திப்பின்  போது அவர் இதனை கூறினார்.

மாநிலத்தின் எந்த குடிமகனும் தடுப்பூசிகளைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மொபைல் செல்வாக்ஸ் திட்டம் செப்டம்பர் 12 முதல் இயங்கி வருகிறது.

செல்வாக்ஸ் மொபைல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் 11 மாநில சட்டமன்றங்கள் (DUN) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு வாரத்திற்கு மேற்கொள்ளப் படும்.

கம்பொங் துங்கு தவிர, மாநில  தொகுதிகளான உலு பெர்ணம், பண்டார் பாரு கிள்ளான், பத்துதீகா, தஞ்சோங் சிப்பாட், கோம்பாக் செத்தியா, புக்கிட் அந்தாரபங்சா, பத்தாங் காளி, பந்திங், திரெத்தாய் மற்றும் டிங்கில் ஆகியவை அடங்கும்.


Pengarang :