ECONOMYNATIONALPBT

அதிக விலையில் சமையல் எண்ணெய் விற்பனை- 111 வணிகர்கள் மீது நடவடிக்கை

கோல பெராங்,  அக் 2- போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலையில் விற்பனை செய்த 111 வணிகர்கள்  மீது உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு நடடிக்கை எடுத்துள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் கடந்த ஆகஸ்டு மாதம் 1 தேதி உச்சவரம்பு விலையை நிர்ணயித்த பிறகு நாடு முழுவதும் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட 19,266 சோதனை நடவடிக்கைகளில் இந்த குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

இச்சோதனை நடவடிக்கைகளின் போது 13,961 வெள்ளி மதிப்பிலான சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதோடு 26,850 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது 14,456 வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 4,699 வணிகர்கள் உச்ச வரம்பு விலைக்கு குறைவாகவும் அந்த அத்தியாவசிய உணவுப் பொருளை விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.

போத்தலில் அடைக்கப்பட்ட அசல் செம்பனை சமையல் எண்ணெய்  5 கிலோ வெ. 29.70 ஆகவும் 3 கிலோ வெ.18.70 ஆகவும் 2 கிலோ 12.70 ஆகவும்  1 கிலோ 6.70 ஆகவும் பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட  1 கிலோ எண்ணைய் வெ.2,50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Pengarang :